விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக போராடியது மட்டுமல்ல விவசாய சங்கங்கள் உருவாகவும் காரணமாக இருந்தவர் நாராயணசாமி நாயுடு. தமிழக விவசாயிகளின் விடிவெள்ளி அவர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், "விவசாயப் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமர் நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில், அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம். அவரது நூற்றாண்டைக் கொண்டாடும்வகையில் கோவை மாவட்டம் துடியலூர்- கோவில்பாளை யம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலத்திற்கு நாராயணசாமி பெயர் சூட்டப்படும். அவர் வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்' ’என்று தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது சாதனைகள், போராட்ட வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம்.
1925-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கோவை மாவட்டம் செங்காளிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வையம்பாளையம் என்ற சிறு கிராமத்தில், எளிய வேளாண்மை குடும்பத்தைச் சேர்ந்த சின்னம்ம நாயுடு- அரங்கநாயகி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் நாராயணசாமி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அவரது கல்வி. பிறகு அவர் தனது தந்தையுடன் நிலத்தில் விவசாயப் பணி களை செய்துவந்தார்.
உழவுத் தொழிலில் ஏற்பட்ட லாபநஷ்டங்களைக் கண்ட நாராயணசாமி, உழவர் களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டுமென்று முடி வெடுத்து, 1957-ஆம் ஆண்டு முதல் பல போராட்டங்களில் கலந்துகொண்டார். உழவர்கள் தனித்து இருப்ப தாலேயே அவர்களது கோரிக்கைளில் வெற்றி காணமுடியவில்லை என்பதை உணர்ந்தவர், உழவர்கள் இயக்கத்தைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தினார். 1968-ல் கோவை மாவட்ட உழவர் இயக்கம், 1970-ல் தமிழக உழவர் இயக்கம் என்று உருவாக்கினார். 1970-லிருந்து 1980 வரை தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
அப்போதைய அரசு விவசாயிகள் பயன்படுத் தும் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவி லிருந்து 10 பைசாவாக மின்கட்டணத்தை உயர்த்தி யது. ஏற்கனவே விவசாயத்தினால் நஷ்டத்தில் உள்ளோம். இப்படி கரண்ட் பில்லை ஏற்றினால் எப்படி கட்டமுடியும்? இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று கருதிய நாராயணசாமி நாயுடு, 1970-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கட்டைவண்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
அதன்படி மாவட்டம் முழுவதுமுள்ள கிராமங்களிலிருந்து கட்டை வண்டிகளைக் கொண்டுவந்து கோவை நகரம் முழுவதும் சந்துபொந்து விடாமல் வண்டிகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு மாடுகளை ஓட்டிச் சென்றுவிட்டார் கள் விவசாயிகள். நகரவாசிகள் இப்படி அப்படி என நகரமுடியாமல் தவித்துப்போனார்கள். நகரத்தின் மூலைமுடுக்கெல்லாம் கட்டை வண்டிகளும், விவசாய டிராக்டர்களும் நிரம்பிவழிந்தன. அரசாங்கம் திகைத்துப்போனது. உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை திரும்பப் பெறாவிட்டால் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
1970-லிருந்து 1999வரை நடந்த பல்வேறு போராட்டங்களில் சுமார் 46 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1972-ல் கோவில்பட்டியில் நடந்த போராட்டத்தில் மூன்று விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1980-ல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட போராட்டங்களால் உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தில் ஒரு பைசாவைக் குறைத்தது அரசு. விவசாயத்திற்கு வழங்கப்பட்டுவந்த நான்கு மணிநேர மும்முனை மின்சாரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.
இந்தப் போராட் டங்களைக் கண்டு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள், மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பீரங்கி வண்டிகள் என்று பாராட்டி செய்தி வெளியிட்டன. நாராயணசாமியின் போராட்டம் நடுத்தர விவசாயிகளை விழிப் புணர்வு அடையச் செய்தது. கிராமங்கள் தோறும் ஏர் உழவன் பொறிக்கப்பட்ட பச்சைக்கொடி பறந்தது. ஊர்கள்தோறும் சென்று கூட்டம் நடத்தி விவசாயிகளை ஒன்றுதிரட்டினார் நாயுடு. விவசாயிகள், சாதி, மதம், அரசியல் கடந்து நாயுடு தலைமையில் ஒன்றிணைந்தனர்.
இதைக் கண்டு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உட்பட பெரும் அரசியல் கட்சிகள் மிரண்டன. எம்.ஜி.ஆர். எந்த கட்சித் தலைவரையும் அவர்களது அலுவலகத்தில் சென்று சந்தித்தில்லை. அவரைத் தேடித்தான் பலர் சென்றனர். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆ.ர் மூன்று முறை வையம்பாளையம் சென்று நாராயணசாமியைச் சந்தித்தார். நாராயண சாமி வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதன்விளைவாக 1984-ல் அவரது ஆட்சி முழுமை அடைவதற்குள் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றிபெற்றார். இதையடுத்து எம்ஜிஆர் சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும் மின்சாரம் இலவசம் என்று அறிவித்தார்.
1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போதைய முதல்வர் கலைஞர் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்ற திட்டத்தை அறிவித்தார். அதேபோல் விவசாயி களின் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற நாயுடுவின் கோரிக்கையை கலைஞர் நிறை வேற்றினார்.
விவசாயிகளின் உரிமைகளைப் பெற்றுத் தர ஆயிரக்கணக்கான போராட்டத்தை நடத்தி 14 முறை சிறைசென்றவர் நாராயணசாமி. இதனால் அவர் பல இன்னல்களை அனுபவித்தார். இவரது போராட்ட வடிவம் இந்தியா முழுவதும் பரவியது. இதன்விளைவாக பஞ்சாப், அரியானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் சங்கம் உருவானது. 1982-ல் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி என்ற கட்சியை உருவாக்கி சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலிலும் பங்கெடுக்கச்செய்தார். 21-12-1984-ல், கோவில்பட்டியில் விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்'' என்றார்ள்.
நாராயணசாமியோடு பயணித்தவர் கோமங்கலம் திருநாவுக்கரசு. உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலச் செயலாளர். அவரிடம் நாராயணசாமி குறித்து கேட்டோம். “"தமிழ்நாட் டில் கடும் வறட்சி, தண்ணீர்ப் பஞ்சம் வந்து எலிக்கறி சாப்பிடச் சொன்னார்கள். கரண்ட் பில் கட்டமுடியாமல் விவசாயிகள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. இதனால் பீஸ் கட்டையைப் பிடுங்கினார்கள். கடன் கட்ட முடியாததால் நிலத்தை ஜப்தி செய்தார்கள். டிராக்டர்களை பறிமுதல் செய்தார்கள், இப்படி பல்வேறு வழிகளிலும் இன்னல்பட்டு இம்சைபட்ட நிலையில், விவசாயிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது நாராயணசாமியின் பேச்சு. கரண்ட் பில் கட்டவில்லை என்பதற்காக பீஸ் கட்டையைப் பிடுங்கவந்தால் நடப்பதே வேறு என்று விவசாயிகள் திரண்டுநின்றார்கள். அரசும் மின்சார வாரியமும் திகைத்தது. அவரது கொள்கையை நாங்கள் பின்பற்றினோம். அந்த போராட்டங்களினால்தான் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது. பிறகு இலவச மின்சாரம் என்ற நிலை உருவானது''’என்கிறார் திருநாவுக்கரசு.
இயற்கை வேளாண்மை விவசாய சங்கத் தலைவர் தங்க சண்முகசுந்தரமோ, "உலகுக்கு உணவளிக்கும் விவசாயி, அவன் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நியாயமான விலை இல்லை. அதனால் கடனாளியாகத் தத்தளிக்கிறான். விவசாயிகள் வாங்கிய கடனை கட்டமுடியவில்லை. வங்கிகளில் தொழிலதிபர்கள் பெற்ற கடனை "வாராக்கடன்' என்று தள்ளுபடி செய்கிறார்கள். விவசாயி பட்ட கடனை ஏன் வங்கிகள் தள்ளுபடி செய்யக்கூடாது? என அப்போதே குரல் கொடுத்தவர் நாயுடு. விவசாய உற்பத்தி செய்யும் பொருளுக்கு கட்டுப்படியான விலையென்பது இன்னும் நிறைவேறாத கனவாகவே உள்ளது. அவரது நூற்றாண்டிலாவது அந்த கனவு நிறைவேற வேண்டும்''’என்கிறார்.
மறைந்த நாராயணசாமி நாயுடுவின் கம்பீரமான முழுஉருவச் சிலையை பெரம்பலூர் பஸ் நிலையம் அருகில் அமைத்தவர் ராஜா சிதம்பரம். இவர் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். அவரிடம் மறைந்த நாராயணசாமி குறித்து கேட்டோம். “
"சமீபகாலமாக பல விவசாய சங்கங்களை அரசியல் கட்சிகளே திரைமறைவில் இயக்குகின்றன. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கத்தை தட்டிக் கேட்க முடியாமல், கூட்டணி தர்மத்திற்காக கோழி, முட்டையை அடைகாப்பதுபோல் பல சங்கங்கள் பாதுகாக்கின்றன. பெரம்பலூர் பஸ் நிலையமருகில் ஐயா அவர்களுக்கு முழு உருவச் சிலை திறக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது. அந்த சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டும் என்று நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி சிலையை அகற்ற முயற்சிசெய்தது. நாங்கள் நீதிமன்றம் சென்று அதைத் தடுத்து நிறுத்தி யுள்ளோம்.
சொந்த ஊரான வையம்பாளையத்தில் நாராயணசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அரசு, நினைவு வளைவு அமைக்க உள்ளது. அப்பகுதி நெடுஞ்சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கு அவரது பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் அவர் சிலையை வேறு இடத்திற்கு மாற்றவேண்டுமென்று தமிழக அரசின் அங்கமாக விளங்கும் ஒரு நகராட்சி முடிவு செய்கிறது. இதை என்னவென்று சொல்வது?''’என்றார்.
-எஸ்.பி.எஸ்